"தமிழ்நாடும் புதுச்சேரியும் ஒன்றுதான்": எம்.ஜி.ஆர். பாணியில் புதுச்சேரியை இணைத்து பேசிய விஜய்

 
1 1

புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்." என புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சி அமைத்ததைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் விஜய்.1977ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, எம்ஜிஆர் 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழ்நாட்டிற்கு அலெர்ட் செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா? என பேசினார் 

வேறு வேறு வீட்டில் இருப்பதால் நாம் சொந்தம் இல்லையா?  தமிழ்நாடும் புதுவையும் வேறு வேறாக இருந்தாலும் நாம் எல்லாரும் ஒன்றுதான். 

தமிழ்நாடு தனி, புதுவை தனி என மத்திய அரசு நினைக்கும். நமக்கு அப்படி கிடையாது, நாம் வேறு வேறு கிடையாது, அனைவரும் ஒன்றுதான். வேறு வேறு வீட்டில், வேறு வேறு இடத்தில் இருப்பதால் நாம் சொந்தங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? இப்போ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்போது அந்த பாச உணர்வு. உலகத்தில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லோருமே நம் உறவுதான், நம் உயிர் தான்.

நமக்கு அப்படி கிடையாது, நாம் வேறு வேறு கிடையாது, அனைவரும் ஒன்றுதான். வேறு வேறு வீட்டில், வேறு வேறு இடத்தில் இருப்பதால் நாம் சொந்தங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? இப்போ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்போது அந்த பாச உணர்வு. உலகத்தில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லோருமே நம் உறவுதான், நம் உயிர் தான்.