ஈபிஎஸ் உருவ பொம்மையை எரிக்க பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?- தமிழ் மகன் உசேன்

 
Thamizh Magan Hussain press meet

எடப்பாடி பழனிச்சாமி உருவப்பொம்மையை எரிக்க பாஜகவினருக்கு  என்ன தகுதி இருக்கிறது, மோடியா லேடியா என கேட்டு லேடி தான் என தமிழகத்தில் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

அதிமுக அவைத்தலைவரின் ஆன்மிக பயணம்! எடப்பாடிக்காக தர்ஹா.. தர்ஹாவாக செல்லும் தமிழ்  மகன் உசேன்! | AIADMK Presidium President Tamil magan hussain Spiritual  Journey - Tamil Oneindia


கள்ளக்குறிச்சியில் உள்ள பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்ட மேடையில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில்  நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக  அவைத் தலைவர்  தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ் மகன் உசேன் , “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இருந்தபோது   ஓ.பன்னீர்செல்வத்தை பொம்மை போன்று தான் முதல்வராக அமர வைத்தார்கள். அதிமுகவிற்கு இக்கட்டான சூழ்நிலை வந்த போது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமியின் திருவுருவப்படத்தை எரிப்பதற்கு  பாஜகவினருக்கு என்ன  தகுதி இருக்கிறது? மோடியா? லேடியா ? எனக் கேட்டு  லேடி தான் என மக்கள் தீர்ப்பளித்து தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர் ஜெயலலிதா” எனக் கூறினார்.