நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

 
Tamil Film Producer’s Council elections to be held in November Tamil Film Producer’s Council elections to be held in November

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

TFPC decides to stop all film related activities from 1st, November 2024 |  நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்  சங்கம்

நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை மற்றும் தற்காலிக படப்பிடிப்பு நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. நடிகர்களின் சம்பளம் குறைப்பு மற்றும் திரைப்படங்களின் தயாரிப்பு செலவை குறிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

அதேபோல் சமீபத்தில் நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் விஷயங்களுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். வரும் 16ஆம் தேதியிலிருந்து புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்குவதில்லை என்றும் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் படங்களின் வேலைகளை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில் அது குறித்து நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் பேச உள்ளனர்.