ஆய்வு என்ற பெயரில் தவெக எம்.எல்.ஏ. அத்துமீறல்?- சமூக வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்

 
s

தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார் ரீல்ஸ் மோகத்தில் கேமராவோடும், காலர் மைக்கோடும் ஆய்வுக்கு செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.



தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார் பதவியேற்ற நாள் முதல், அரசு மருத்துவமனை, அம்மா உணவகம்,  டாஸ்மாக் என பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுவருகிறார். டாஸ்மாக்கிற்கு சென்ற அவர், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை எடுக்க சொல்லிட்டோம். மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக வந்து தெரிவிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார். அம்மா உணவகத்தில் எம்ஏல்ஏ சரத்குமார் ஆய்வு மேற்கொண்டபோது, உணவு அருந்தியபடியே தொலைபேசியில் அதிகாரியிடம் குறைகளை தெரிவித்தார். தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க எம்.எல்.ஏ சரத்குமார் மருத்துவர்கள் மற்றும் காண்ட்ராக்டரை லெப்ட் ரைட் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகளை இழிவாக பேசுவது, ஒருமையில் பேசுவது இதெல்லாம் கூடாது..!  அரசு மருத்துவமனைல தண்ணீர் இல்லாதது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா..? ஒரு வேலையும் சரியா நடக்கல.. இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது சரிங்கலா..? எப்போ வேண்டும்னாலும் திரும்ப வருவேன் என எச்சரித்தார்.


எம்எல்ஏ என்பவர் மக்கள் பிரதிநிதி... அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  ஆய்வுகளை மேற்கொள்ளலாம்... அதன்படி ஒரு எம்.எல்.ஏவுக்கு தன் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் அவருக்கு எந்தவித உத்தரவிடும் அதிகாரமும் இல்லை... அபராதம் விதிப்பது, ஒப்பந்தத்தை ரத்து செய்வது என எந்த அதிகாரமும் இல்லை... தான் ஆய்ந்தறிவதில் ஏதேனும் குறைகளை கண்டால் அதை சரிசெய்து தர அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம்... முறைகேடுகளை கண்டறிந்தால் புகார் அளிக்கலாம்... அதிகாரியின் மீதே புகார் என்றால், அத்துறையின் உயர் அதிகாரிகளிடம் அல்லது காவல்துறையில் புகார் அளிக்கலாம்... அத்துறை அமைச்சர்களிடம் நடவடிக்கை எடுக்கக் கோரலாம். ஏதேனும் மேம்படுத்த, கொண்டுவர, சிறப்பு கவனம்பெற சட்டப்பேரவையில் பேசலாம். தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை வரையறுக்கப்பட்ட முறையில் எதற்கு பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம். அதனைவிடுத்து நேரடியாக அந்த மருத்துவமனையின் டாக்டர்களையோ அதிகாரிகளையோ எச்சரிக்கவோ அவர்களுக்கு ஆணையிடவோ அதிகாரம் கிடையாது. இப்படி இருக்கையில், புதிதாக எம்.எல்.ஏ பொறுப்பேற்றிருக்கும் தவெக எம்.எல்.ஏக்கள் தங்கள் கடமைகள் மற்றும் அதிகாரங்களை மீறி ரீல்ஸ் வெளியிடுவதிலேயே குறியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றனர்.