இன்ஸ்டாவில் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட தமன்னா கைது

 
ரீல்ஸ்

கோவையில் சமீபத்தில் சத்திய பாண்டியன், கோகுல் என்ற இரண்டு ரவுடிகள் அடுத்தடுத்த நாளில் படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் நீதிமன்ற சாலையில் கொல்லப்பட்டார். ரவுடி சத்தியபாண்டியன் ஆவாரம்பாளையம் பகுதியில் துரத்தி துரத்தி வெட்டி, சுட்டு கொல்லப்பட்டார். 

இந்த நிலையிலே கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரவுடிகளின் கொலை பின்னணியில் உள்ள கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் கைதான ரவுடிகளிடம் விசாரணை நடந்தன. விசாரணையில் சில ரவுடிகள் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு வன்மம் கக்கியதாக தெரியவந்தன. இந்த நிலையிலே சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரை பிடிக்க, போலிஸார் திட்டமிட்டிருந்தனர். தனிப்படை போலீசார் விசாரணையில் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட, முதல் தேடுதல் வேட்டையில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 


இந்த நிலையிலே பயங்கர ஆயுதங்களுடன் புகைபிடித்தவாறு காணா பாடலுடன் காட்சிப்படுத்தப்பட்ட பெண் தாதா வீடியோ சமூக வலைதளத்தில் வட்டமடித்தன. “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இளம் தாதா தமன்னா இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்து வீடியோ அப்லோடு செய்து அட்டகாசம் செய்திருக்கின்றார். அதில்  புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், “எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம், ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான கானா பாடலுக்கு மவுத் சிங் செய்திருப்பார். இந்த பெண், கொலை குற்றவைகள் சிலருடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்று கூறப்பட்டன. தனிப்படை காவல் துறையினர்  நடத்திய அதிரடி விசாரணையில் இந்தப் பெண் விருதுநகரை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி என்பதும் 25 வயது நிரம்பிய பெண் என்பதும் தெரியவந்தது.  

பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நர்ஸிங் மாணவி: போலிஸ் தேடும் கோவை  தமன்னா யார்?

இந்த நிலையில் மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து வலைவிரித்து தேடினர்.  ஒருபுறம் காவல் துறையினர் தேடிக் கொண்டிருந்த நிலையில் அவர் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ஆயுதங்களுடன் தான் ரீல் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோ எனவும், trending கிற்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் தனது கனவுகளுடன் ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதிலேயே தான் வந்தால் மட்டுமே தனது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலரை விடுவிப்பேன் என காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறி அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

நர்ஸிங் மாணவி டு ரெளடி கேங்... `பட்டாக்கத்தி' ரீல்ஸ் - போலீஸ் தேடும் கோவை  தமன்னா | Coimbatore police searching thamanna who did reels with weapon

இந்த நிலையில் தமன்னாவை பிடித்த தனிப்படை போலிஸார்,  கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடும் தாதாக்கள் கைது செய்யவ்படுவது ரவுடிகளிடம் பீதியினை ஏற்படுத்தியிருக்கின்றன. சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் சமூக வலைதளங்களை நோட்டமிட்டு தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்வதாக தனிப்படை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்தி வன்மத்தை காக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். கைதான தமன்னா மீது கஞ்சா வழக்கு முன்னதாக பதிவாகி இருக்கின்றன. சமூக வலைதளம் உள்ளிட்டவற்றை நல்ல நோக்கத்திற்கு இன்றி தவறாக பயன்படுத்துவோர் பட்டியலை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மாநகர போலீசார் சேகரித்து நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்