அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் என்ன? நாளை அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை

 
mkstalin

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

M.K.Stalin

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும், அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு 4 அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு , நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.