தொகுதி பங்கீடு குறித்து திமுக-காங்கிரஸ் இடையே இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை!

 
dmk

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

congress

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 15 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில், 7 அல்லது 8 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 இடங்களை வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது.