நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக- நீதிமன்றம்

 
madurai high court

அக்டோபர் 19ஆம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியின் ஆசீர்வாதத்தில் நியோமேக்ஸ்... கோடிக்கணக்கில் கொள்ளை போன  மக்கள் பணம்.. இனி என்னவாகும்? | Neomax with the blessings of the ruling  party... Crores of looted ...

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது.  இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி  என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி,  திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாக  ஆசை வார்த்தை  கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி பலர் பல ஆயிம் கோடிக்கு முதலீடுகளை  செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். 


இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரை சேர்ந்த கபில், கமலக்கண்ணன்,  பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர். இந்த நிலையில் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஜாமீன் பெறப்பட்ட நிர்வாகிகள் சார்லஸ் மற்றும் இளைய ராஜா ஆகியோருக்கு வழங்கிய ஜாமின் ரத்து செய்யக்கோரி ஜெயின்குமார்  உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் வேலு என்பவர் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு அனைத்தும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி இந்த வழக்கில் எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எத்தனை நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர் வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவன சொத்துக்கள் தற்போது கண்டறியப்பட்டு அதனை வழக்கில் அட்டாச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறை செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவே மேலும் கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை போதுமானது அல்ல: உயர் நீதிமன்றம்  அதிருப்தி | Police action not enough in Neomax fraud case High Court -  hindutamil.in

அப்பொழுது நீதிபதி இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதி சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு கால தாமதிக்க காரணம் என்ன இனியும் கால அவகாசம் வழங்க முடியாது அக்டோபர் 19-ம் தேதிக்குள் நியூ மேக்ஸ் சொத்துக்களை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் தவறும் பட்சத்தில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.