இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!! இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது..!!

 
ration

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு ஏதுவாக இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (06.11.2026) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.