பழைய தெம்போடு தாய் மண்ணுக்கு வந்துள்ளேன் - டி.ராஜேந்தர்

 
Many producers have been affected by his son Simbu. What will T. Rajender do if he comes to power?  – Ramasamy Murali

ரசிகர்கள்,பொதுமக்கள் பிரார்த்தனையால் பழைய தெம்போடு உணர்வோடு வந்திருக்கிறேன் என்று டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க  தெரிவித்துள்ளார்.

Actor-Director T Rajendar AKA TR Hospitalised For THIS Reason - Filmibeat

நடிகரும் இயக்கனருமான டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 14 -ம் தேதி அமெரிக்கா சென்றார், ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 4 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சென்னை வந்த டி.ராஜேந்தரை இலட்சிய திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் செய்தியளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர், “டி.ராஜேந்தர் என்று சொன்னால் தன்னம்பிக்கை என்பார்கள். ஆனால் நான் இந்த இடத்தில் நிற்பதற்கு கடவுள் நம்பிக்கை தான் காரணம்.என் மீது அன்பும் மனித நேயமும் வைத்த தமிழக மக்கள் ரசிகர்களுக்கு நன்றி.இவர்களுடைய பிரார்த்தனையின் பலன் தான் எனக்கு சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம்போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டிலேயே சிகிச்சை போதும் என்றேன், ஆனால் என் மகன் அமெரிக்காவில் சிகிச்சைக்கு வலியுறுத்தியதால் சென்றேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அமெரிக்காவுக்கு சென்றேன். அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கத்தினர் மிகுந்த அன்பை காட்டினார்கள்.நன்றாகிவிட்டது என்னுடைய இதயம் நான் எதிர்கொண்டு இருப்பது உதயம். அமெரிக்கா செல்ல உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. இருமனம் ஒன்று பட்டால் திருமணம் கடவுள் எழுதியது தான் நடக்கும்.கால சக்கரம் சூழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள் மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் எங்கள் இல்லத்திற்கு நல்ல குணமுடைய திருமகள்,மருமகள் வருவாள் கடவுள் மீது நம்பிக்கை எனக்கு உள்ளது” என தெரிவித்தார்.