படித்தவர்கள் இருக்கும் ஒரே கட்சி TVK தான்- டி.ராஜேந்தர்

 
ச்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு விஜய் நன்றி சொன்னார். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்களை சந்திப்பேன்  என்றும் அவர் கூறினார்.  

இரண்டு ஹீரோயின்களும்….108 பாடல்களும் …. அசத்தல் டி.ராஜேந்தர் | Two heroines  for TR's 'Oru Thalai Kaathal' - Tamil Filmibeat

ஏப்ரல் 29 மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை கடந்த புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தேர்தலுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. ஆக்சிஸ், சாணக்கியா, என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் டிவி-பி மார்க், மேட்ரிஸ், டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அவை கணித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. அதேசமயம் சமூக வலைதளங்களில் தவெகவே வெற்றி பெறும் என நெட்டிசன்கள் ஆருடம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய்யை பார்த்து பயந்துபோய் தற்குறி என்று சிலர் சொல்கிறார்கள். அரசியலுக்கு வந்து இன்று கோடிக்கணக்கான வாக்குகளை பெற்ற விஜய் தற்குறி என்றால் இத்தனை காலம் மக்களை ஏமாற்றி பிழைத்த நீங்கள் என்ன அறிவாளியா? இன்று படித்தவர்கள் அதிகம் இருக்கும் ஒரே கட்சி விஜய்யின் தவெக கட்சிதான்” என்றார்.