தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

 
stalin

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற  தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ttn

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20  கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில்  நேற்று தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த  கர்நாடகா அணி,  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.  இதை தொடர்ந்து 152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி,  கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் இளம் வீரர் ஷாருகான்  சிக்சர் அடித்து கோப்பையை தக்க வைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்ற பெருமையுடன்,  இதுவரை 3 முறையும் முஷ்டாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "#SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்! " என்று பதிவிட்டுள்ளார்.