திமுகவினரிடம் இருந்து இனிப்பு பறிமுதல்

 
s

தி.மு.கவினர் கொடுப்பதற்காக வைத்திருந்த லட்டை  காவல்துறையினர் தட்டோடு எடுத்துச் சென்றனர்.  

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.  பிரமாண்ட புதிய உள்விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கும் முதல்வர், பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கவுள்ளார்.  CM விஜய் நாளை புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விஜய். புதுக்கோட்டை நகரில் ரோடு ஷோ நடத்தி புதிய பேருந்து நிலையம் செல்கிறார் முதல்வர் விஜய். முதல்வர் வருகையை முன்னிட்டு நாளை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  புதுக்கோட்டையில் நாளை புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கவுள்ள நிலையில், இரண்டு திட்டங்களும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை எனக் கூறி தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கிய போது அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.