"கருணாநிதி பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்"- தமிழக அரசு அரசாணை

 
karunanidhi

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளன்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Varagu Arisi Sakkarai Pongal Recipe - Kodo Millet Sweet Pongal Recipe

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும், இனிவரும் காலங்களில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் தர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.