விஜய் விரும்பினால் திங்கள்கிழமை பதவியேற்பு விழா - ஆளுநர் மாளிகை

 
விஜய்

தமிழக வெற்றி கழக தலைவர் இன்று 118 ஆதரவை எம்எல்ஏக்கள் கடிதத்துடன் ஆளுநரை நான்காவது முறையாக சந்திக்க சென்றுள்ளார். கடந்த மூன்று முறை சந்தித்த ஆளுநர் இந்த முறை சந்திக்க நேரமில்லை என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து விஜயிடம்  செல்போன் மூலம் தொடர்பு கொண்டு  பெரும்பான்மை கடிதத்தை நாளை ஒப்படைக்க கூறியதாக ஆளுநர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் விரும்பினால் திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு.இதன் மூலம் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு 120 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையோடு ஆளுநரை சந்திக்க சென்ற விஜய்க்கு ஆளுநர் நேரம் கொடுக்காதாதால் மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார்.