சுவாமி சகஜானந்தாவின் கல்விப் பணிகளும், சமூகப் பணிகளையும் போற்றுவோம் - அண்ணாமலை

 
annamalai

சுவாமி சகஜானந்தாவின்  கல்விப் பணிகளும், சமூகப் பணிகளையும் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

இதுத்தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில்,  அடித்தட்டு மக்கள், கல்வியால் மட்டுமே உயர முடியும் என கல்வி நிறுவனங்களை நிறுவி பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய சுவாமி சகஜானந்தா அவர்கள் பிறந்த தினம் இன்று. 


சுவாமி சகஜானந்தா அவர்கள் நிறுவிய நந்தனார் கல்விக் கழகம் இன்று ஆல் போல் பல்கிப் பெருகி, பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. தலைசிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அவர்கள், அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர். 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்தவர். 

சுவாமி சகஜானந்தா பிறந்த தினமான இன்று, அவரது கல்விப் பணிகளும், சமூகப் பணிகளையும் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.