‘முதல்ல இடத்தை காலி பண்ணிட்டு ஓடிடு’ அண்ணாமலையை கலாய்த்த எஸ்.வி.சேகர்

 
sv

முதல்ல இடத்தை காலி பண்ணிட்டு ஓடிடு என அண்ணாமலையை எஸ்.வி.சேகர் கலாய்த்துள்ளார்.

annamalai

 
கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,18,825 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3 லட்சத்து 34 ஆயிரத்து 695 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன் ஒரு லட்சத்டு 72 ஆயிரத்து 841 வாக்குகளை பெற்றுள்ளார்.  திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கும் அண்ணாமலைக்கும் இடையே சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளன. இந்நிலையில் தென்னிந்தியாவின் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது. பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் கூட ஒன்று கூட வெற்றி பெற இயலவில்லை.


அண்ணாமலையின் தோல்வியை கலாய்க்கும் விதமாக எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பொறந்த நாளுக்கு எங்கம்மா மசாலா ஆம்லெட் பண்ணி குடுத்தாங்கடா. 
உனக்கு ஸ்கூல்ல டீச்சர் போட்டாங்களே அந்த முட்டையை வைச்சாடா. நீ வாங்கின முட்டைக்கு உன்னையே பிரியாணி ஆக்காம விட்டாங்களே. முதல்ல இடத்தை காலி பண்ணிட்டு ஓடிடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.