அண்ணாமலை இருக்கும் வரை திமுகவின் வெற்றி உறுதி - எஸ்.வி.சேகர்

 
sv

த.வெ.க தலைவர் விஜய்யின்  பாசிசம், பாயாசம் என்ற பேச்சுக்கு  சினிமாவில் தான் கைத்தட்டல் கிடைக்கும், அரசியல் கிடைக்காது என நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான  எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

sv sekar

சென்னை சோழிங்கநல்லூர் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நீரிழிவு சிறப்பு கிளப்பை  நடிகர் எஸ்.வி சேகர் திறந்து வைத்தார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரத்தியேக கால் சென்டர் எண்ணை அவர் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர், “மும்மொழி கொள்கை தேவையற்றது, அவரவருக்கு பிடித்த மொழியை அவரவர் படிக்கலாம். நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என்று அமித்ஷா இந்தியில் தான் பேசினார். பிரெஞ்சு,ஜப்பனிஸ் படிக்க விரும்புபவர்களுக்கு தனித்தனியாக ஆசிரியர்கள் வைத்து பள்ளிக்கூடங்கள் நடத்த முடியுமா? இந்தி படிக்க விரும்புபவர்கள் இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்து இலவசமாக இந்தி கற்றுக் கொள்ளலாம். இந்தி எதிர்ப்பை மறக்கலாம் என நினைத்தால் முடியாதென ஒன்றிய அரசு தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. அது அவர்களுக்கு வரும் ஓட்டை குறைத்துவிடும். மத்தியில் அதிகபட்சம் 2027 வரை பாஜக இருக்கலாம். ஆனால் அதற்கு பின்னும் அவர்கள் ஆட்சிக்கு வருவது சிரமம்தான். அண்ணாமலை இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி உறுதி.

 
தொடர்ந்து பாசிசம், பாயாசம் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசிவருகிறார். அவர் பேச்சுக்கு சினிமாவில் வேண்டுமானால் கைதட்டல்கள் கிடைக்கலாம், அரசியலில் கிடைக்காது. பாஜக தலைவர் அண்ணாமலை உலருவாய். அண்ணாமலை பேச விட்டால் பாஜக வலுப்பெரும். அவர் பேசினால் திமுக தான் தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும். சீமான் தன் மீது தவறு இல்லை என்றால் காவல்துறையை நேர்மையாக எதிர்கொள்ளலாம். அதை விட்டு மூன்று முறை சம்மன் கொடுக்கும் அளவிற்கு வைத்துக் கொள்வது குறித்து சீமானுக்கு தான் தெரியும்” என்றார்.