அதிமுகவுக்கு முதல் அழைப்பு விடுத்த தேமுதிக!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அவருடன் தலைமைக்கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதியும் உடன் சென்றிந்தார். ஜனவரி 28 ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதற்கான குருபூஜையில் கலந்துகொள்ளுமாறு, நிகழ்ச்சி அழைப்பிதழை சுதீஷ், எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். டிச.28இல் குருபூஜை நடப்பதையொட்டி, முதல் ஆளாக ஈபிஎஸ்ஸின் வீட்டிற்கே சென்று அழைப்பு விடுத்துள்ளார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் சுதீஷ், “விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தோம். அரசியல் குறித்து பேசவில்லை.” என்றார்.


