போடி அருகே 8 மாத கர்ப்பிணி சந்தேக மரணம்- கணவன் தலைமறைவு

போடி அருகே டொம்புச்சேரியில் 8 மாத கர்ப்பிணி பெண் சந்தேகமாக மரணமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
போடி அருகே டொம்புச்சேரி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவில் வாசித்து வரும் வீரக்குமார். இவரது மனைவி சரண்யா. 25 வயது திருமணம் ஆகி நான்கு வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு பத்ரு என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளன. அடுத்ததாக 8 மாத கர்ப்பிணியான சரண்யா தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி நிலையில் இரவு உறங்க சென்ற நிலையில், அதிகாலையில் படுத்த படுக்கையில் சடலமாக இருப்பதைக் கண்ட கணவர் வீரக்குமார், அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்திற்கு தகவல் கூறிபார்த்தபோது சரண்யா இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இதுகுறித்து டொம்புச்சேரி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த டொம்புச்சேரி அரசு மருத்துவமனைசெவிலியர்கள் சரண்யாவின் உடலை சோதனை செய்ததில் இறந்திருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை செய்தபோது இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இச்சம்பவம் குறித்து டொம்புச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அழகேஸ்வரி பழனிசெட்டிபட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை செய்யுமாறு தெரிவித்தனர். இந்நிலையில் டொம்புசேரி அரசு மருத்துவத்துறையினர் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்த பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது கணவன் வீரகுமார் மற்றும் அவரது மகன் பத்ரு இருவரும் தப்பி ஓடி தலைமறைவு ஆகினர். இதனால் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இறந்த சரண்யாவை கணவர் கொலை செய்தாரா அல்லது சரண்யா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.