உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்
Nov 24, 2025, 15:10 IST1763977220000
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் 2027 பிப்ரவரி வரை தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பு வகிப்பார்.
- யார் இந்த சூர்யகாந்த் சர்மா?
- இந்தியாவின் 53ஆவது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த் சர்மா
- 1962ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்
- 1981ஆம் ஆண்டில் அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்றார்
- 1984ஆம் ஆண்டில் இளங்கலைச் சட்ட படிப்பினை முடித்தார்
- 2000 ஆம் ஆண்டில் அரியானாவின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்
- 2004 ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியேற்றார்
- 2011-ஆம் ஆண்டில் முதுகலை சட்ட படிப்பினை முடித்தார்
- 2018 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்
- 2019 அன்று, காந்த் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.
- பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்த அமர்வில் நீதிபதியாக அங்கம் வகித்தவர்.


