“ரூ.140 கோடிக்கு எடுக்கப்பட்ட கருப்பு... ஆனா விலை போவதோ ரூ.30”- தயாரிப்பாளர்கள் வேதனை

 
ச்

கருப்பு திரைப்படம் வடமாநிலங்களில் வெளியாகிய நிலையில் க்யூப் நிறுவனத்தை தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பணப்பிரச்சனையின் காரணமாக இந்த திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை.  ஆனால் இந்த திரைப்படம் வடமாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்தை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய கியூப் நிறுவனம் இந்த திரைப்படத்தை உரிய முன்னறிவிப்பு இல்லாமல் வெளியிட்டது தெரியவந்துள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கத்தினர் அனைவரும் ஒன்று கூடி சென்னை மயிலாப்பூரில் உள்ள க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாரிப்பாளர்கள், கியூப் நிறுவனத்தில் பணிபுரியகூடிய ஊழியர் ஒருவரின் தவறால் இந்த திரைப்படத்தின் உடைய கே.டி.எம் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இந்த திரைப்படம் வெளி மாநிலங்களில் வெளியானதன் காரணமாக சட்டவிரோதமாக திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் க்யூப் நிறுவனம் தயாரிப்பாளருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். அப்படி உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  கருப்பு திரைப்படம் வெளியீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் இன்று இரவுக்குள் அனைத்து விஷயங்களும் சரியாக திரைப்படம் வெளியாகும் எனவும் தெரிவித்தனர். கருப்பு திரைப்படம் 140 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ளது. ஆனால் அதை ஓடிடிட்டியில் விற்கும் போது வெறும் 30 கோடிக்கு தான் விற்பனையாகிறது, இதுதான் இன்றைக்கான நிலைமையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.