கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா - ஜோதிகா..

 
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா - ஜோதிகா.. கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா - ஜோதிகா..

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோர் கீழடி அருங்காட்சியகத்தை  நேரில் பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.   இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  இதில் 2600 ஆண்டுகள் பழைமையாக  பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள்  கிடைத்தன.  அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிபடுத்த  ரூ.18.42 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்து நேரில் பார்வையிட்டார்.

கீழடி

அதன்பின்னர் நாள்தோறும்  தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.  இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை இதுவரையில் அனைவரும் இலவசமாக பார்வையிட்டு சென்றனர்.  இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி  உள்நாட்டு  மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு  15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா - ஜோதிகா..

வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழடி  அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சூர்யா - ஜோதிகா மும்பைக்கு குடிபெயர உள்ளதை ஒட்டி, சிவக்குமார் குடும்பத்தில் விரிசல் விழுந்ததாகவும் , குடும்பத்தினருடன் ஜோதிகா பேசுவதில்லை என்பது போன்ற பல வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் ஆகியோர் ஒன்றாக கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.