தனது பெயரில் போலி அறிக்கை- நடிகர் சூர்யா புகார்

 
bala - surya movie

தனது பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

gang: Surya: Dubbing in Telugu for 'Gang' was an incredible experience |  Telugu Movie News - Times of India

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை பாராட்டி அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. இந்நிலையில் நடிகர் சூர்யா  பெயரில் அதுதொடர்பான சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த  பொய் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் தனது டிவிட்டரில் சூர்யா  பெயரில் போலியான அறிக்கை உலாவி வருவதாகவும், அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் துணை தலைவர் மனோஜ் தாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.