சூர்யா, அஜித், இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே - ஆர்த்தி யாரை சொல்கிறார்?

 
Q

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர் ஜெயம் ரவி. இவருடைய தந்தை திரைப்பட படத்தொகுப்பாளர் என்பதால், ஜெயம் ரவிக்கு தன்னுடைய சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதேபோல் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவும், சிறுவயதில் இருந்தே திரைப்பட இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டவர். அந்த வகையில் தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து... 'ஜெயம்' என்கிற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து மாஸான வெற்றியை கொடுத்தார் மோகன் ராஜா. இந்த படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது மட்டுமின்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தாஸ், மழை, இதய திருடன், போன்ற பல படங்களில் ஜெயம் ரவி நடித்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு உலக அளவில் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழன் அருண் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பெற்றோர் சம்பந்தத்துடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 15 வருடங்கள் ஆகும் நிலையில், ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி ஜோடிக்கு இடையே பர்சனலாக சில கருத்து வேறுபாடுகள் போய்க் கொண்டிருந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக பல தகவல்கள் வெளியானது

இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், ஆர்த்தி தற்போது வெளியிட்டுள்ள ஒரு Instagram Story சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தி தனது பதிவில்,சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே, நடிப்பு ஆஸ்கர் (Acting Oscar) அவார்டே கொடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்த்தியின் பதிவு வெளியானதும், "யாரை குறிப்பிடுகிறார்?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பலரும் இது ரவி மோகனைப் பற்றிய பதிவாக இருக்கலாம் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.