பதவியேற்பு நேரத்தில் விஜய்க்கு திடீர் செக்? இன்று கேரளா பறக்கும் ஆளுநர்!

 
1

தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுவாக ஆளுநர், விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, பின்னர் 2 வார காலத்திற்குள் சட்டசபையில் 118 உறுப்பினர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவிப்பதே வழக்கம்.

ஆனால் இம்முறை  118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விஜய் காட்டிய பின்னரே, விஜய்யின் பதவிப் பிரமாணத்தை ஆளுநர் செய்வார் என்று தெரிகிறது.தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) சற்று குறைவாக உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற ஆதரவுகளைத் திரட்டி விஜய்க்கு ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவெக-வினர்  இடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது