‘இந்த படமாவது ஹிட் ஆகணும்’- மாசாணியம்மன் கோயிலில் சூர்யாவின் புதிய பட பூஜை
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடிகர் சூர்யாவின் புதிய படத்திற்கான பூஜை நடைபெற்றது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இன்று நடிகர் சூர்யாவின் பெயரிடப்படாத படத்திற்கான பூஜை நடைபெற்றது.நடிகர் மற்றும் இயக்குனருமான ஆர். ஜே. பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து இன்று பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் இப்படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.நடிகர் சூர்யா பட பூஜையில் கலந்து கொண்டதால், அவரைக் காண அப்பகுதியில் ரசிகர்கள் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குவிந்தனர்.