#BREAKING சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துகள் முடக்கம்
Nov 6, 2025, 19:05 IST1762436143528
சட்டவிரோத பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியது தொடர்பாக வழக்கில் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ.11.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியபோது, சட்டவிரோத பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியது தொடர்பாக வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெய்னாவின் ரூ.6.64 கோடி மற்றும் தவானின் ரூ.4.5 கோடி சொத்துகளை முடக்கப்பட்டுள்ளன.

