"துபாயில் அஜித் பாதுகாப்பாக உள்ளார்"- சுரேஷ் சந்திரா தகவல்

 
ajith

கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ள நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக உள்ளார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா  திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கியதை அடுத்து, ஈரான் பதிலுக்கு, அமெரிக்காவின் சில பகுதிகளை தாக்குதல் நடத்த தொடங்கியது. இதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், இயக்கப்படும்  16 வருகை விமானங்களும், அதைப்போல் புறப்பாடு விமானங்கள் 12, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று இரண்டாம் நாளாக தொடர்ந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு புறப்பட்டு செல்லும் அதைப்போல் அங்கிருந்து சென்னைக்கு வரும் விமானங்களும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ள நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக உள்ளார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனங்களிடம் கூறுகையில், நடிகரும், கார் ரேஸாருமான  அஜித்குமார் துபாயில் பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அஜித் இன்று சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக அவருடைய பயணம் திட்டம் ரத்தானது.  இந்த பதற்ற சூழல் முடிவடைந்ததும் சென்னை திரும்புவார் எனக் கூறினார்.