ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?- செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

 
senthil balaji senthil balaji

செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

senthil balaji

விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பு, தமிழகத்தில் அரசின் காலம் இன்னும் ஒராண்டில் முடிவடையப்போகிறது, அப்போது இவரது அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் வழக்கு விசாரணையில் செல்வாக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என வாதிடப்பட்டது. இதனைக்கேட்ட உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்கிய போது அமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பியது.

அது அரசியல், அது குறித்து நமக்கு தெரியாது,இந்த அரசு தொடருமா என்பதும் தெரியாது. ஆனால்,செந்தில் பாலாஜி வழக்கில் செல்வாக்கை பயன்படுத்தினார் என்பது ஏற்கனவே நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே நீங்கள் சட்ட நடைமுறைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாது, ஒரு சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பது உங்களுக்கு தெரியாதா? அரசியல்வாதிகள் ஜாமின் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் தெரிவித்த மொழிகளை மீறுகின்றனர் இது ஏற்க முடியாத ஒன்று. இந்த விவகாரத்தை பொறுத்தவரை இது சாதாரண விசயம் கிடையாது. அமைச்சராக இல்லை என்று கூறியதன் அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டது. ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்ட நபர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பார் என வாதம் வைக்கப்பட்டது, ஆனால்  நாங்கள் அந்தக் குற்றச்சாட்டைப் புறக்கணித்தோம். ஆனால் ஜாமீன் வழங்கிய சில நாட்களுக்குள் நீங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறீர்கள், அவர் மீண்டும் அமைச்சராகிறார். இது நீதிமன்றத்தை நீங்கள் கையாளும் முறை அல்ல, கேலிகூத்தாக்குகிறீர்களா ? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.