“இன்னும் 24 மணி நேரம் மட்டும்தான்... சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது”- ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது, ஆளுநர் சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மசோதாக்கள், துணை வேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என நாளை மறுநாள் தெரிவிக்க ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்னும் 24 மணிநேரம் இருப்பதால், ஆளுநர் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொது பட்டியலிலுள்ள விவகாரங்கள் தொடர்புடைய மசோதாக்களை மட்டுமே ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது, ஆளுநர் சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது, எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினாரா? அவ்வாறு செய்திருக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையால் மக்கள் துன்பப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசும் துன்பப்படுகிறது எனக் கூறியுள்ளது. மேலும் ஆளுநர் , மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும், வேண்டுமானால் தேநீர் விருந்துக்கு அழைத்து பேசுங்கள் என்றும் ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
.