இனி வாரத்தில் 2 நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..!
May 16, 2026, 14:25 IST1778921739771
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் எதிரொலியாக பிரதமர் நரேந்திர மோடி எரிபொருளை சேமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இனி காணொளி வாயிலாக மட்டும்தான் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

