சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து

 
savukku

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 

Madras High Court junks plea in cases of YouTubers' 'Savukku' Shankar and  Felix Gerald - The Hindu

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில்  சவுக்கு சங்கர் ஜாமின் பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒருசில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, கஞ்சா வைத்து இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் தன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, மீண்டும் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் தன் மீது வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது தொடர்பான ஆலோசனை குழுவை ஏற்க மறுத்தது. இதனை அடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்ப பெற்று இருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு திரும்ப பெறுகிறது என அறிவித்ததை அடுத்து அவருக்கு எதிரான குண்டார் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கரை பிணையில் விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே, எல்லா வழக்குகளிலிருந்தும் சவுக்கு சங்கர் பிணைப் பெற்றுவிட்ட நிலையில், உத்தரவு நகல் வந்ததும் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.