நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - ஐகோர்ட்..!
Feb 25, 2026, 13:20 IST1772005847173
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர் தரப்பில் யாரும் ஆஜராகாததால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீடித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

