பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக அறப்போராட்டம் - சீமான் ஆதரவு

 
seeman

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த  அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

tn

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்களால் 550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.


ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அயராது போராடி வரும் மக்களின் போர்க்குணமும், போராட்ட உணர்வும் போற்றுதற்குரியது. இதே பற்றுறுதியோடும், உறுதிப்பாடோடும் இறுதிவரை நின்று, போராட்டத்தின் நோக்கத்தில் வெற்றியடைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மண்ணின் மக்களோடு எப்போதும் நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என இச்சமயத்தில் உறுதியளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.