வீரமணியின் வேட்புமனுவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க வந்தவர்களை பொளந்து கட்டிய ஆதரவாளர்கள்

 
ச்

நாட்றம்பள்ளி அருகே முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி அளவுக்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதாக சொத்து பட்டியல் ஆவணத்துடன் புகார் அளிக்க வந்த நான்கு பேருக்கு அடிஉதை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின்  2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி. வீரமணி போட்டியிட உள்ளார். அதனை தொடர்ந்து இன்று காட்பாடி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் ஜெயப்பிரகாஷ்( 51) மற்றும் சண்முகம் என்பவரின் மகன் ஜெகன் (36), கோட்டி என்பவரின் மகன் தினேஷ் (34 )மற்றும் வேலூர் பகுதியை சேர்ந்த தணிகைவேல் (52 )ஆகியோர்  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்பவர் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதாகவும் பல்வேறு முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் பொய்யான சொத்து மதிப்பை வழங்கி உள்ளதாகவும் மேலும் கணக்கில் காட்டாமல் அவர் வைத்துள்ள சொத்துபட்டியல் தொடர்பான ஆவணங்களை காட்டுவதற்காக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 


அப்போது முன்னால் அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் அவருடைய ஆரவாளர்கள் பலரும் சேர்ந்து நான்கு பேரை அடித்து துன்புறுத்தி தங்களுடன் வந்த வேலூர் பகுதியை சேர்ந்த தணிகைவேல் என்பவரை அழைத்து சென்று விட்டதாக கூறி உடன் வந்த மூன்று பேரும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இதே போன்று தான் பொய்யான சொத்து மதிப்பை முன்னாள் அமைச்சர் கே.சி‌. வீரமணி வழங்கியதாகவும் இது தொடர்பாக தாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் பொய்யான சொத்து மதிப்பை கொடுத்து வேட்டுமனு தாக்கல் செய்துள்ளதாகவும் பல்வேறு முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து இது தொடர்பாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியதின் பேரில் அவர்கள் மூன்று பேரும் போலீசார் பாதுகாப்புடன் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.