மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு!

 
tn

மக்களவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

stalin

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தனது ஆதரவினை கூறியுள்ளார். 

tn

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, மக்களவைத் தேர்தலில் "இந்தியா" கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு அளிக்கிறது; ஜனநாயக மாண்புகளை காக்க "இந்தியா" கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததாக வெளியானது தவறான செய்தி; ஜனநாயகத்தை காக்கும் வலிமையான அணி என்பதால் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றார்.