"சமச்சீரான கல்வி வரும்பொழுது நீட்டை ஏற்கலாம்" - செல்வப்பெருந்தகை

 
tyy

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக  செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ttt

இந்நிலையில்  சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை , “விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவை அளிக்கும். திமுக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , நீட் தேர்வு விலக்கு கோரி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் என்ற கொடிய எமன் அகற்றப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளிகளில் சமச்சீரான கல்வி வரும்பொழுது நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு இடத்தில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் ஒரு இடத்தில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் என இருக்கும் பொழுது நீட் தேர்வு நடத்துவது சரியாகாது என்று தெரிவித்தார்.