மார்க் சீட் எப்போது பெறலாம்? - துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அறிவிப்பு!

 
தனித்தேர்வர்கள்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள், செய்முறை தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. மதிப்பெண்கள் வெளியான பிறகு குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வுகளை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இவர்களுக்கும் தனி தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் தனித்தேர்வு எழுதும்.... மாணவர்களுக்கு தேதி அறிவிப்பு...!!! •  Seithi Solai

இதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியானது. அதேபோல செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என சொல்லப்பட்டது. தற்போது இந்த நடைமுறை முடிந்துவிட்டது. இதற்குப் பிறகு இறுதி முடிவும் வெளியிடப்பட்டது. 

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் | SSLC Exam -  hindutamil.in

இச்சூழலில் மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பர் 25ஆம் தேதி முதல் அவர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய நடைமுறையில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும். தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.