10ம் வகுப்பில் தோல்வியா? கவலை வேண்டாம் - முக்கிய அறிவிப்பு இதோ!

 
tn

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில்  91.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்கள் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.  

tn

தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர்  மாவட்டம்   97.31%  தேர்ச்சி விகிதம் பெற்று  முதலிடத்தில் உள்ளது.  தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில்  மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

tn

இந்நிலையில் 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என்றும்  10ம் வகுப்பு மறு கூட்டலுக்கு வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல் பெறவும் வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.