சூப்பர் நியூஸ்..! இனி வெறும் ரூ.7.40 லட்சம் லட்சத்தில் SUV காரை அறிமுகம் செய்த மாருதி சுசூகி..!
மாருதி சுசூகி தனது புதிய ப்ரெசா காரை வெறும் 7.40 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய மாடல் காரில் புதிய இன்ஜினி ஆப்ஷன், கியர்பாக்ஸ் மேம்பாடு, புதிய வசதிகளும், வெளிப்புறத்தில் சில முக்கிய காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த புதிய 2026 ப்ரெசா மாடல் கார் தற்போது சந்தையில் இருக்கும் ஹூண்டாய் வென்யூ, ஸ்கோடா கைலாக், டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, கியா சோனட், கியா சைரஸ் கார்களுக்கு பெரும் போட்டியாக அமையும்.மாருதி சுசூகி நிறுவனம் இப்புதிய காருக்கு அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும், அதேபோல் சற்று பவர்ஃபுல்லான இன்ஜினை கொடுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் புதிதாக 1.0 லிட்டர் பூஸ்டர்ஜென் இன்ஜினை அறிமுகம் செய்துள்ளது, இந்த இன்ஜின் 110ஹெச்பி, 170 நியூட்டன் பவரை கொடுக்கிறது.
பழைய ப்ரெசா காரில் இருந்த 5 ஸ்பீட் கியர்பாக்ஸை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றார் போல் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ்-ஐ கொடுத்துள்ளது. இதோடு முன்பக்க இருக்கையில் வென்டிலேஷன், ஏர் ப்ரிபையர், 10.1 இன்ச் பெரிய டச்ஸ்கிரீன் என பல முக்கிய அம்சங்களை கொண்டு வந்து இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் மாருதியில் ஒரு வழியாக டர்போ ஆப்ஷன் கொண்டு வந்துள்ளது, பழைய மாடல்களை போலவே இந்த புதிய மாடலிலும் சிஎன்ஜி ஆப்ஷனை underbody-mounted kit மூலம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பூட் ஸ்பேஸ் கூடுதலாக கிடைக்கும், இதேபோன்ற சேவையை தான் விக்டோரிஸ் காரில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

