இல்லத்தரசிகளுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்! ஒரே வாரத்தில் பாதியாக குறைந்த தக்காளி விலை..!!

 
Q

தக்காளியின் விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கடலூருக்கு தக்காளி வரத்து திடீரென குறைந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த வாரம் மொத்த விற்பனையில் 55 ரூபாய்க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய் வரையிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், கடலூர் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை கிடுகிடுவென சரிய தொடங்கியுள்ளது.

 நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மீண்டும் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.