தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் வெயில்.. வானிலை மையம் வார்னிங்!

 
1

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது. ஏற்கனவே மழை குறைந்துவிட்ட நிலையில், வெயில் அதிகரித்து வருகிறது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் இருந்தாலும், மதியத்திற்கு பின் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறுகையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஞாயிற்றுக் கிழமைகளில் பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளைகளில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதேபோல் பிப்.4 முதல் பிப்.8 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.