‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகியது ஏன்?- சுந்தர்.சி விளக்கம்
ரஜினியின் தலைவர் 173 படத்தில் இருந்து விலகியது ஏன்? என முதல்முறையாக மனம் திறந்தார் இயக்குநர் சுந்தர்.சி.

பிஹைண்ட்வுட்ஸ் உடனான ஒரு உரையாடலில், 173 படத்தின் திட்டத்திலிருந்து ஏன் விலக முடிவு செய்தார் என்பதை அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி, “உண்மையைச் சொல்லப்போனால், அது எனக்கு மிகுந்த அழுத்தமாக இருந்தது. இந்த அளவுக்கு பெரிய படத்தை எடுத்தால், என் creative instincts-ஐ முழுதாகப் பயன்படுத்த முடியாது என்று எனக்கு தெரிந்தது. என் இயல்பான ஸ்டைலில் படத்தை இயக்க முடியாது, பல சமரசங்கள் செய்ய வேண்டிய சூழல் வரும் என்பதால் படத்தைவிட்டு விலகுவதுதான் சரி என்று முடிவு செய்தேன். பெரிய படத்தில் நான் மட்டும் எதையும் முடிவு செய்யமுடியாது என்பதால் ரொம்ப பிரஷராகிவிட்டது. கொடுத்தவர்களுக்கும், உண்மையாக இருக்க முடியவில்லை என்பதால் அதில் இருந்து விலகுவதே நல்லது என தோன்றியது” என்றார்.

