தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

 
school

தமிழக பள்ளிக்கல்வி பாடத்தைத் திட்டத்தின் படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள் முடிவடைந்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைவிலான மாணவர்கள் ஏப்ரல் 12ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தேர்தல் பணி காரணமாக ஏப்ரல் 15 முதல் 21ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்தல் முடிந்ததும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி கடந்த 22,  23ஆம் தேதிகளில்   தேர்வுகள் நடத்தப்பட்டன.  இதை தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை  விடுமுறை தொடங்குகியது. 

schools open

இதனிடையே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படும் என்று கூறியது. 

schools leave

இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடைகளை இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.