#BREAKING தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நீட்டிப்பு

 
school

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

PM Schools

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில்  கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.  வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர். கோடை மழையின் காரணமாக  கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில்  108  டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில்  வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது.