கோடை வெயில் தாக்கம் - வண்டலூரில் கோடை மேலாண்மைப் பணிகள் தீவிரம்

 
ytn

தமிழகத்தில் கோடை வெயில் என்பது மக்களை வாட்டி வருகிறது. 105 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் , மக்கள் வீடுகளை விட்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  கோடை காலத்தில் மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் திரவ ஆகாரங்கள்,  பழங்களை எடுத்துக் கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மனிதர்களைப் போல விலங்குகளும் கோடை வெயிலால் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளது. வனத்தில் வாழும் விலங்குகள் கோடைகால வெப்பத்தை தணித்துக் கொள்ள சுதந்திரமாக திரியும்.  இயற்கையும் அதற்கு சாதகமாக அமையும். ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் வைக்கப்பட்டுள்ள மிருகங்கள் கோடை காலத்தில்  மிகவும் பாதிக்கப்படுகிறது.கோடை காலத்தில் விலங்குகள் உணவு உண்பதை குறைத்துக் கொள்கிறது. உடல் மெலிந்து நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.

vandalur zoo

இந்நிலையில்  கோடை காலத்தில் விலங்குகளை பராமரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொண்டு அனைவரும் கோடை கால மேலாண்மை பூங்கா பணிகளை வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர்  பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பூங்காக்களில் விலங்குகளின் தன்மைகளுக்கு ஏற்றவாறு பல வழிகளில் கோடை மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

summer

யானைகள் வெப்பத்தை தணித்துக் கொள்ள ஏதுவாக சகதிப்புரளல் குட்டை , நீர் தெளிப்பான் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.  மனித குரங்குகளுக்கு தர்பூசணி ,இளநீர் ,வெள்ளரிக்காய், லஸ்ஸி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.  சிங்கவால் குரங்கு ,நாட்டுகுரங்கு, கருங்குரங்கு ,அனுமன் குரங்கு , கப்புச்சி குரங்கு உள்ளிட்டவற்றிக்கும் இதே உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறு கரடி,  இமாலய கருங்குருவி ஆகியவற்றிற்கு கோடைகால உணவாக தர்பூசணி பழம் வழங்கப்படுகிறது.

tn

பறவைகள் மற்றும் மான்களுக்காக கூரை அமைக்கப்பட்டுள்ளதால் அதிகப்படியான குளிர்ச்சி நிலவுவதற்கான சூழல் நிலவி வருகிறது. ஒட்டகச்சிவிங்கி , வரிகுதிரை,   நெருப்புக்கோழி ஆகியவற்றின் இருப்பிடங்களில் நீர் தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது . வெப்பத்தை தணித்துக் கொள்ளும் பொருட்டு இதர விலங்குகள் இருப்பிடங்களிலும் நீர் பிடிப்பு குட்டைகளில் எப்பொழுதும் நீர்த்தேக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.