#BREAKING சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக சுமதி நியமனம்

 
s

சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் பெண் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளுக்கு மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார். அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி, 02.06.2026 முதல் சட்டத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தின் மூலம், ப.சுமதி சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என தமிழக அரசு கூறியுள்ளது.