எம்.பி சீட் தருவதாக என்னிடம் ரூ.50 கோடி வாங்கினார் கெஜ்ரிவால் - சுகேஷ் சந்திரசேகர்!

 
sukesh chandrashekhar

நான் கொள்ளையர் என்றால் கெஜ்ரிவால் மகா கொள்ளையர் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Sukesh Chandrashekhar: 5 Facts On Millionaire Conman

இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத் தரகர் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது  அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  

இந்த சம்பவத்தின் அறிமுகமான சுகேஷ் சந்திரசேகர் சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் மிகப்பெரும் கொள்ளைக்காரன் என என்னைபற்றி கூறியிருக்கிறீர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே. மாநிலங்களாஇ சீட் தருவதாக என்னிடம் ரூ.50 கோடி பெற்றீர்கள். 20 முதல் 30 பேரிடம் பேசி ரூ.500 கோடி பணம் திரட்டிக் கொடுத்தால், ஆம் ஆத்மி சார்பாக தேர்தல் சீட்டும், பதவிகளும் தருவதாக கூறினீர்கள். தமிழ்நாட்டின் சில எம்.எல்.ஏக்கள், நடிகர்களை ஆம் ஆத்மியில் இணைக்கும் வேலைகளை செய்ய வற்புறுத்தினீர்கள்

நான் பெரிய கொள்ளைக்காரன் என்றால் நீங்கள் மகா கொள்ளைக்காரன் ஒட்டுமொத்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் கொடுக்க இருக்கிறேன். பதிலளிக்கத் தயாராக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.