தற்கொலை தீர்வு அல்ல : காவிரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சாதுரியமாக காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்..!

 
1

காவிரி ஆறு பாலத்தில் இருந்து திடீரென குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள பழைய காவேரி ஆற்றுப்பாலத்தில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில்  35 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதை அந்த பக்கமாக வந்த ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக தன் ஆட்டோவில் இருந்த கயிற்றை வீசி அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். மேலும் அங்க மீனை பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக கரை சேர்த்தனர். அந்த பெண் அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் அவரை உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடனடியாக போலீஸ் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அதில் அவர் பெயர் தமிழரசி என்றும் கடந்த 3 மாதங்களாக உடல் நிலை சரியில்லாததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.